தமிழகத்தின் அறிவைத் தேடி குழுமம்- லண்டன் வெற்றிநடை ஊடகம் இணைந்து நடத்தும் இலவச பேச்சுக்கலை பயிற்சி பட்டறை.
தமிழகத்தின் அறிவைத் தேடி குழுமத்தோடு லண்டனின் வெற்றிநடை ஊடகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பேச்சுக்கலை பயிற்சி பட்டறை வருகின்ற நாட்களில் மிகச்சிறந்த பேச்சுக்கலை பயிற்றுநர்களோடு
ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மாபெரும் பேச்சுகலை பயிற்சியில் மிகச் சிறப்பாக பயிற்சி பெற்று சிறந்த பேச்சாளர்களாக உருவாகின்ற பேச்சாளர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பயிற்சி பெறுகின்ற பயிற்சியாளர்கள் அனைவருக்கும் மேடையில் பேசுவதற்கும், உள்ளூர் வெளியூர் தொலைக்காட்சிகளில் பேசுவதற்கும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது .
அறிவைத் தேடி குழுமத்தின் பேச்சுக்கலை பயிற்சிப் பட்டறை பாகம் ஒன்றில் பயிற்சி பெற்ற 30 பேச்சாளர்கள் இன்று பல மேடைகளில் தங்களுடைய பேச்சால் அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அறிவைத் தேடி குழுமத்தின் நிறுவனர் கவிமணி ம.உதயகுமார் அவர்கள் கூறியதாவது:
பேச்சுக் கலை பயிற்சி பட்டறை ஒன்றில் தலைசிறந்த 30 பேச்சாளர்களை உருவாக்கி தந்திருக்கின்றோம் இப்பொழுது பேச்சுக்கலை பயிற்சி பட்டறை பகுதி இரண்டு பிரமாண்டமான முறையிலே துவங்கப்பட இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளர்களை உருவாக்கும் எங்கள் பணி தொடரும் எனவும் இப்பொழுது எங்களோடு கை கோர்த்து இருக்கின்ற லண்டனிலிருந்து செயற்படும் வெற்றிநடை ஊடகத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.