“ஒத்த ரூபாய்”
முல்லைத்தீவின் முள்ளியவளையில் நீண்ட காலம் வசிக்கும் சுந்தரம் தனது ஆறு பிள்ளைகளுடனும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது ஆசை மனைவி அன்னம்மாவுடனும் சைக்கிள் கடை ஒன்றை நடத்தி இதன் மூலம் வருமானத்தைப் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தான். மூத்த பிள்ளைகள் நான்கும் பெண் பிள்ளைகள். கடைசி இரண்டும் ஆண் பிள்ளைகள். பெண் பிள்ளைகளில் இருவர் பள்ளிப்படிப்பை முடிவித்து விட்டு வீட்டில் தாய்க்கு உதவியாக இருக்கின்றனர். ஏனையவர்கள் வறுமையில் கல்வியைத் தொடர்ந்து கற்றுகு;கொண்டு இருக்கின்றனர்.
முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தில் அவன் பெற்றுக் கொண்ட லாபம் அந்த ஆறு பிள்ளைகள் மட்டும் தான். வலியாரின் வயிறை வறுமைதின்ன பசி மட்டும் வசதியாய் சுந்தரம் வீட்டில் பாய்போட்டு படுத்திருந்தது. ஆனால் வெளி ஆட்களின் பார்வைக்;கு தன் குடும்ப கௌரவம் குறையாமல் குடும்பத்தை கொண்டு நடத்தினான். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் தான் கணேசன் வீடு. கணேசன் சுந்தரத்தின் மூத்த மகளோடு தான் கல்வி கற்றவன். பள்ளிக் காலத்திலேயே இருவருக்கும் காதல் பிரிக்க முடியாத அளவுக்கு காதல் மிக நெருக்கமாய் இருந்தது. ஆனால் கண்மணி வீட்டின் வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமல் க.பொ.த சாதாரண தரத்தோடு படிப்பை நிறுத்தி விட்டாள். கணேசன் படிப்பை தொடர்ந்தான்.
கணேசனின் அப்பா விவசாயம் செய்பவர். மூன்று சகோதரங்களுடன் பிறந்த கணேசன் வீட்டின் செல்லப்பிள்ளை. ஆனாலும் படிப்பில் கெட்டிக்காரன். தினமும் பாடசாலை செல்லும் போது சுந’தரம் கடையில் தான் காற்றடிப்பான். அப்போது தன் கண்மணியை கடைக்கண்ணால் தேடுவான். அவளும் வீட்டின் உள்ளிருந்து அவன் வரும் வேளை எட்டிப்பார்;ப்பாள். காதல் கண்களால் பரிமாறப்படும். சைக்கிள் ரயர் காற்றால் திரும்பும் போது கணேசனின் மூச்சும் காதலால்; நிரம்பும். இது வழக்கமான நிகழ்வுதான். கணேசன் பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக்கழகம் தெரிவாகி கலைப்பீடத்தில் இப்போது இரண்டாம் வருடத்திக் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றான். கல்வியோடு காதலும் தொடர்ந்தது. காதலோடு வறுமையும் படர்ந்து ஒன்றாக கலந்தது.
றாட்கள் செல்லச் செல்ல நாட்டின் காலநிலை மாற்றத்தால்; விவசாயத்தில் பல பின்னடைவுகளை சந்தித்தார் கணேசனின் தந்தை. இதன் காரணமாக கணேசனின் தந்தை விவசாயக் காணியில் பாதியை விற்றார். அப்பணத்தில் தன் மூத்தமகளுக்கு திருமணம் செய்து வைத்தார். சுந்தரத்தின் குடும்பம் போலவே கணேசனின் குடும்பமும் வறுமையால் வாடத்தொடங்கியது. கணேசன் பல்கலைக்கழகம் சென்று வந்தபின்பு தன் ஒய்வு நேரத்தில் சந்தையில் சென்று மரக்கறிகள் தேங்காய்கள் எடுத்து வந்து விற்பனை செய்தான். சைக்கிளில் தான் சென்று வருவான். இதன் காரணமாக தனது சைக்கிளை இன்னொர காதலியாகப் பார்த்தான். கண்மணியுடன் பேச முடியாத விடயங்களை தனது சைக்கிள் முன் அமர்ந்து பேசிக் கொள்வான். தனது சைக்கிளை இன்னொரு கண்மணியாகவே பார்க்க ஆரம்பி;த்தான். சைக்கிளில் சென்றுவரும் போதெல்லாம் கண்மணி தன்னுடன் வருவதாகவே எண்ணிக் கொள்வான்.
ஒரு நாள் சைக்கிளுக்கு காற்றடிக்க வரும் போது கண்மணி ஓடிவந்து அவனிடத்தில் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு வேகமாக வீட்டினுள் ஓடிச்சென்றுவிட்டாள். கணேசணுக்கோ அளவற்ற ஆனந்தம். அதை எங்கிருந்தோ கண்டுவிட்ட சந்தரம் வேகமாக வந்து கணேசனின் கையிலிருந்த கடிதத்தை வாஙகிப் பார்த்தார். கணேசனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரே படபடப்பு. கணேசன் தலையைக் குனிந்தவாறே நின்றான். சுந்தரம் கணேசனிடம் “தம்பி இதெல்லாம் சரிவராது அப்பன் நடக்கிற விசயமாக இருந்தா மேல கதைக்கலாம். ஆனா சரிவராத ஒன்ட நினைச்சு நீ உன்னோட நேரத்தை கழிக்காம ஒழுங்கா படிப்ப முடி” என்று கூறி விட்டு கடிதத்தை மீண்டும் கணேசனிடமே கொடுத்துவிட்டு கண்கலங்கிய படியே சென்றுவிட்டார். மூச்சுப்போய் நின்றது விட்டது கணேசனின் முன்சில்லு டயர் மட்டுமல்ல கணேசனும் தான்.
இன்று எல்லோருக்கும் என்ன ஆயிற்று? என்ன நடக்கிறது இங்க எனயோசித்தவாறே சைக்கிளுக்கு காற்றை அடித்துவிட்டு கணேசன் போய்விட்டான். ஓரிடத்தில் சைக்கிளை விட்டுவிட்டு இறங்கி கல்லொன்றின் மேல் அமர்ந்தபடி கண்மணியின் கடிதத்தை ஆவலோடு திறந்து பார்த்தான். “அன்புள்ள கணேசனுக்கு ஆசையுடன் கண்மணி எழுதுவது! நான் பள்ளிபயின்ற காலத்தில் உன்னோடு உன் சைக்கிளில் சுற்றித்திரிந்த காலங்களில் எல்லாம் எனக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் புரியவில்லை. மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் எந்தவித கவலையும் இன்றி வாழ்ந்து வந்தேன். இப்போதெல்லாம் எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என்னை மறந்துவிடு. என்னை மன்னித்துவிடு” என்று எழுதி இருந்தது. கல்லிருந்தபடியே கல்லானான் கணேசன்.
பல்கலைக்கழகம் சென்று பரீட்சை எழுதிவிட்டு வந்தவன் தன் நண்பர்களிடம் நடந்த விடயத்தை சொல்லியழுதான். அவர்களோ “டேய் மச்சான் அழாதடா. எல்லாம் நல்லதுக்கு தான். விடடா என்றனர். அவர்களில் ஒருவன் டேய் மச்சான் கணேசா விசயம் அது இல்லடா அவளுக்கு இதயத்தில் ஓட்டையாமடா, அதுக்கு ணப்பிறேசன் செய்ய பல லட்சம் வேணுமாடா. பாவம் சுந்தம் அண்ணா. என்ன செய்வார். பக்கவாதம் வந்த மனைவியைப் பார்ப்பாரா….. இல்ல கண்மணிக்கு இதய ஒபிரேசன் செய்ய காசு சேர்ப்பாரா….. இல்ல அன்றாடம் தனக்கு பணத்தைத் தரும் சைக்கிள் கடையை நடத்தி வேலை செய்வாரா? சொல்லுடா. அவங்க நிலமையில் இரந்து பாருங்கடா. பாவம்டா சுந்தரம் அண்ணா….. பாவம்டா கண்மணி…. என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். எல்லோரும் திகைத்துப் போய் நின்றனர்.
நாட்கள் மாதங்களாயின கணேசனால் படிக்க முடியவில்லை. ஆனால் சுந்தரம் கடைக்குச் சென்று காற்றடிக்கும் சாக்கில் கண்மணியை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. இது சுந்தரத்துக்கும் தெரியும். கணேசன் பிரதேச செயலகம் சென்று சுந்தரத்திற்கு சைக்கிள் கடைக்கு தேவையான வாழ்வாதார உதவிகள் கிடைக்க ஆவண செய்தான். தன்னால் தான் அந்த உதவி கிடைத்ததை அவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஏனெனில் சுந்தரம் மானஸ்தன் உதவி வேண்டாம். அதுவும் நீ செய்வதனால் வேண்டாம் என்று கூறிவிடுவார் என்று அவனுக்குத் தெரியும்.
கணேசன் மனதளவில் உடைந்து போனான். தனது கடையையும் சரியாக பார்த்துக் கொள்ளவதில்லை. படிப்பும் பாதியில் நின்றுபோனது. கணேசனின் குடும்பத்தார் சுந்தரத்தின் மகள் கண்மணி தான் இதற்கு காரணம் என்பதை அறிந்து அவர்களின் வீட்டின் முன் நின்று கத்திக்கூச்சல் போட்டு சண்டையிட்டனர். இதனால் கோபமடைந்த சுந்தரம் கண்மணியை அழைத்து அவர்கள் முன் நிறுத்தி கண்ணத்தில் ஓய்கி பளார் என அறைந்தார். கண்மணி அங்கேயே மயங்கி நிலத்தில் சரிந்து விழுந்தாள்.
இந்தக்கதை ஊர் முழுவதும் காட்டுதீயாய் பரவியது. ஊர் மக்கள் சுந்தரத்தின் வீட்னெ; முன் கூடி நின்றனர். மயங்கி விழுந்த கண்மணியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஆஸ்hத்திரிக்கு கொண்டு சென்றனர். கihயறிந்து கணேசனும் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தான். கணேசனைக் கண்ட சுந்தரம் கணேசனின் சேட்டைப் பிடித்து டேய் உன்னால தானடா என்னோட பிள்ளைக்கு இந்த நிலமை என்ர பிள்ளைக்;கு ஏதாவது ஆச்சுதெண்டால் உன்னைக் கொன்றுவிடுவேனடா என்று கத்த ஆரம்பித்தார். ஆஸ்பத்திரியில் நின்றவர்கள் சுந்தரத்தை சமாதானப்படுத்த கணேசனை அவரது நண்பர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
கண்மணி அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அவளது சகோதரர்கள் ஆஸ்பத்திரி வாசலில் நின்று அழுது கொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. அருகில் நின்றவர்கள் சேர்ந்து அழுதார்கள். மணித்தியாலங்கள் கடந்தன வைத்தியர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கண்மணிக்கு சிகிச்சையளித்தனர். கதவைத்திறந்து ஐயா இங்க வாங்க. அவங்க மயக்கத்தில் இருக்கிறாங்க. இன்னும் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்திடும். நீங்க அவங்களோட பேசலாம்” என்றார். சுந்தரம் உரத்த குரலில் கண்மணி…. என கதறி அழுதார். பின்பு கண்மணியின் கிளினிக் காட்டை எடுத்து வைத்தியரிடம் கொடுத்தார். அவரும் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றார்.
இரண்டு நாட்களின் பின் கண்மணி வீடு திரும்பினாள். வழக்கம் போல கணேசன் சுந்தரத்தின் சைக்கிள் கடைக்கு காற்றடிக்க வந்தான். கண்மணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காற்றடிக்க காசு எடுத்துக் கொண்டுவர மறந்து விட்டான். சுந்தரம் காற்றடித்து விட்டு காசுக்கு கணேசனிடம் கையை நீட்டினார். அப்போது தான் சுய நினைவு வந்தவனாய் கணேசன் காசைத்தேடினான். காசு இல்லை என்ற கணேசனை நோக்கி நிமிர்ந்து பார்த்த சுந்தரம் இதனை ஒரு சாக்காக வைத்து இவன் இனி கடைக்கு வராதபடி செய்ய வேண்டும் என்று எண்ணினான். உடனே கோபமாய் சைக்கிளுக்கு காற்றடிக்க ஒத்த ரூபாய்க்கு வக்கில்லாத நாய் நீ…. உனக்கு காதல் ஒன்டு தான் குறை… சரிசரி…. போய்த்துலை” என்றார். இதனை சற்றும் எதிர்பாராத கணேசன் சற்று திகைத்துப் போனான். வீட்டினுள் இருந்து எட்டிப்பார்த்த கண்மணி “அப்பா…. என்ன இது…. ஏன் இப்படி பேசுறீங்க சும்மா இருங்க” என்று அழுதாள். சுந்தரம் உடனே “இப்படி ஒத்த ரூபாய், ஒத்த ரூபாயாய் காசு சேர்த்தா தான் உனக்கு இதய ஒப்பிறேசனுக்கு காசு சேர்த்துக் கொடுக்க முடியும் பேசாமல் உள்ள போ என்றார். விம்மி விம்மி அழுதபடி கணேசனை நிமிர்ந்து பார்த்து “மன்னித்துவிடு” என்பது போல கண்களால் கேட்டாள். அவன் சமாதானமானது போல தெரியவில்லை. அவளுக்கு ஏதும் பேசாமலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
மறுநாள் அவளது கடைசித்தம்பியிடம் ஒரு கடிதத்தை கொடுத்தனுப்பினான். கண்மணி கடிதத்தை படித்துவிட்டு கடிதத்தில் இருந்தபடியே உடுப்புக்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கணேசனுடன் ஓடிப்போக ஆயத்தமாக காலை ஐந்து மணிக்கே வந்து நின்றாள். கணேசனும் நண்பர்களும் அங்கேவந்தனர். கணேசன் கண்மணியை முன்பக்கம் ஏற்றிக் கொண்டு உடுப்புக்கள் கொண்டு வந்த பையை சைக்கிளின் பின்பக்கம் வைத்துக் கொண்டு, நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டு ஓடத்தொடங்கினான்.
சைக்கிளின் முன்னே இருந்த கண்மணியிடம் “உங்கப்பன் என்னப்பார்த்து ஒத்த ரூபாய்க்கு வழியில்லாதவன் என்று சொன்னாரல்லவா…. வா…. வந்துபார் உன்னை கல்யாணம் பண்ணி எப்படி வச்சிருப்பன் எண்டு. உங்க அப்பா அம்மா பார்த்து வாயப்பிளக்கப் போறாங்க” என்றான். அதற்கு கண்மணி “கணேசா நான் சாக வேண்டிய நிலமை வந்தா உன்னோட மடியில தான் சாவன்” என்றாள். ஏய் உனக்கென்ன பைத்தியமா காலங்காத்தால கதைக்கிற கதையா இது. நான் செத்தெண்டாலும் உன்ன வாழ வைப்பன். புரியுதா…பேசமா இரு” என்று செல்லமாய் கடித்து கொண்டான்.
காற்றைக்கிளித்துக் கொண்டு சைக்கிள் பறந்தது. குயில்களும் குருவிகளும் பனிமூட்டம் காரணமாக ஒன்றோடு ஒன்று மோதி கீச்சிட்டன. பனிக்குளிரில் கணேசனுடன் கண்மணி ஒட்டிக்கொண்டாள். அவனது மூச்சுக் காற்றின் வெப்பம் இதமாக இருந்தது. அவளுக்கு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் அந்தச் சிரிப்பும் சில நொடிகள் தான் நீடித்தது. எதிரே மண் ஏற்றிவந்த டிப்பருடன் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் சரிந்த சைக்கிளுடன் கணேசனுடன் கண்மணியும் சேர்ந்து உருண்டு பள்ளத்தில் விழுந்தான்.
அலறிய சத்தம் கேட்டு கணேசனின் பின்பும் டிப்பர் வாகனத்தின் பின்பும் வாகனத்தின் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இவர்களை நோக்கி ஓடிவந்தனர். கண்மணி பேச்சு மூச்சின்றி கிடந்தாள். கNணுசன் முனகிக்கொண்டிருந்தான். கண்மணி…. கண்மணி… அம்மா…. என்று முனகினான். கணேசனின் கையையும் காலையும் பிடித்து தூக்கினார்கள். தலையிலிருந்து இரத்தம் ஆறாய் ஓடியது. கண்மணியை தூக்கினார்கள். அவள் அசைவற்றுக்கிடந்தாள்.
இருவரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். தகவல் இருவரின் குடும்பத்துக்கும் சொல்லப்பட்டது. சுந்தரம் திகைத்துப் போனார். மனைவியிடம் சொலலிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொணடு ஓடிப்போனார். கணேசனின் குடும்பத்தார் போக முன்னம் கணேசனின் நன்பர்கள் ஒடிச்சென்று கணேசனின் நிலமையை பார்த்தார்கள். கணேசனும் கண்மணியும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
கணேசன் ஏதோ சொல்ல ஆசைப்படுகிறான் என்பதை அறி;ந்த வைத்தியர் அருகில் சென்று காதைக் கொடுத்துக் கேட்டார். “கண்மணி…. கண்மணி.. எப்படி இருக்கிறாள் சுகமா…” என்று கேட்டான். அதற்கு வைத்தியர் பள்ளத்தில் விழுந்ததால் அவங்க இதயத்தில் அடிபட்டிருக்கு மயக்கத்தில் இருக்கிறாங்க” என்றார். “யார் கூடவாச்சும் பேசப்போறீங்களா” என்று கேட்டார். ஆம் என்றான். கண்ணாடி வழியே கணேசனின் நண்பர்களும் சுந்தரமும் எட்டிப்பார்த்துக் கொண்டு நின்றனர். சுந்தரம் கதிகலங்கி நின்றார். கணேசனின் நண்பர்களில் ஒருவரை வைத்தியர் உள்ளே அனுமதித்தார். கணேசன் அவனுடன் கையைப்பிடித்தபடி ஏதோ பேசினான். பின் அசைவின்றிப் போனான்….. அவன் கணேசனின் கையை அசைத்துப்பார்த்தான் அசையவில்லை. டொக்டர் என்று கத்தினான். உடனே வைத்தியர் வந்து கNணுசனைப் பார்த்தார்.
கணேசனின் பெற்றோரும் சகோதரர்களும் கணேசன் இறந்து விட்டதை எண்ணி ஒருவரை ஒருவர் கட்டியணைத்தவாறு அழுதனர். வைத்தியர் வெளியே வந்து கணேசனின் பெற்றோருடன் தனிப்பட்ட முறையில் கதைக்க வேண்டும் என்று கூட்டிச் சென்றார். அழுதபடியே அவர்கள் வைத்தியர் பின்னால் சென்றனர். வைத்தியர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றனர். “ டொக்ரர் என்ன சொல்றீங்க தளதளத்த குரலில் கேட்டார் கணேசனின் அப்பா. வைத்தியர்” பதட்டப்படாதீங்க நான் சொல்றத கவனமாகக் கேளுங்க. உங்க மகன் சாகல ஆனா…. என்று இழுத்தார். கணேசனின் அப்ப “என்ன ஆனா…..? என்று கேட்டார். “அவர் மூளைச் சாவடைந்திட்டார். தன்னுடைய உறுப்புக்களை தானம் கொடுக்கச் சொல்லிவிட்டார். உடலை பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு கொடுக்க சொல்லிட்டார்” என்று வைத்தியர் கூறினார். இவையெல்லாம் என்ன என்று விளங்காமலேயே கணேசனின் பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்தனர். வைத்தியர் அவர்களுக்கு உறுப்பு தானம் பற்றி விளக்கினார்.
கண்மணியின் ஒடல்நிலை கவலைக்கிடமானது. சுந்தரத்தை அழைத்த வைத்தியர் கண்மணிக்கு இதய ஒப்பிறேசன் செய்ய வேண்டிய கட்டாயத்தை எடுத்துக்கூறினார். சுந்தரம் “ஐயோ இறiவா உனக்கு தேவை ஓர் உடம்பு தான் எண்டா….. என்னை எடுத்துக்கோ…. என்ர பிள்ளையை விட்டுவிடு” என்று கதறினான். வைத்தியர் சுந்தரத்திடம் சில் பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். சுந்தரம் மனைவியிடம் விசயங்களைச் சொல்வதற்கு ஓடினார். வழியில் கணேசனின் சைக்கிள் கிடப்பதைப்பார்த்து எட்டி உதைத்தார். “பாவிப்பயல் ஒத்தரூபா பெறுமதியில்லாத பயல்… என்ர பிள்ளையை கூட்டிக்கொண்டு போய் இப்படிச் செய்திட்டீயேடா நாசமாய் போவனை…” என்று திட்டிக் கொண்டே சைக்கிளை கடந்து போனார். யாரும் எடுப்பாரற்று கணேசனின் சைக்கிள் நடுத்தெருவில் அநாதையாய் கிடந்தது.
சுந்தரம் வீடு சென்றபின் தனக்குத்தெரிந்த சிலரிடம் காசு மாறிக்கொண்டு மீண்டும் வைத்தியசாலைக்கு ஓடினார். கணேசனின் நண்பர்களும் பெற்றோரும் சுந்தரத்தை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தனர். அவர்களை கடந்து சுந்தரம் யார் முகத்தையும் பாராமல் கடகடவென நடந்து போனார். “சுந்தரம்… சுந்தரம்…” கணேசனின் அப்பாவின் குரல் அது சுந்தரம் திரும்பிப் பார்த்தார். கண்மணிக்கு ஒப்பிறேசன் முடிஞ்சுது. எல்லாம் நல்லதா முடிஞ்சுது. டொக்டர் சொன்னவர் நீங்க பதட்டப்படாதீங்க…” என்று தளுதளுத்த குரலில் சொன்னார். சுந்தரம் பேசாது நின்றார். அவரது எண்ணமெல்லாம் “அப்படியென்றால் கணேசன் எப்படி இருக்கிறான்” என்பது தான். நிமிர்ந்து கணேசனின் அப்பாவை பார்த்தார். “அப்படியொன்றால் கணேசன்…” என்று சுந்தரம் முடிப்பதற்குள் ஐயோ…. சுந்தரம் கணேசன் செத்துப்போயிட்டான். என்னவிட்டு என்ர மகன் போயிட்டான்… ஐயோ” என்றழுதார். சுந்தரம் ஓடிவந்து கணேசனின் அப்பா கையைப்பிடித்தார். ஆறுதல் சொல்தா? என்ன செய்வதென்று தெரியது அவர் தோளுடன் சாய்ந்து அழுதார்.
பின் அவரிடம் அதுசரி கண்மணிக்கு எப்படி ஒப்பிறேசன் நடந்தது. அது எப்படி சாத்தியமாகும் என்று ஆச்சரியத்துடன் கேட்டார். கணேசனின் அப்பா “அது வந்து….. கணேசன் தான் தன்னோட இதயத்தை கண்மணிக்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறான். அவனோட மற்ற உறுப்புக்கள் வேற வேற ஆட்களுக்கு வைக்கப்போகினம். என்ர மகள் செத்தும் எத்தனை பேர வாழவச்சிருக்கிறான்” என்றார். பெருமிதத்துடன் “கோடான கோடி கொடுத்தும் வாங்க முடியாத உறுப்புக்களை தானமாக கொடுப்பதற்கும் ஓர் மனசு வேண்டும். அந்த மனசு தான் கடவுள்” என்று கூறிக்கொண்டு அவர்களை கடந்து சென்றார் வைத்தியர். சுறுக்கென்று முள்தைத்தது போல உணர்ந்த சுந்தரம் கணேசனின் அப்பாவின் தோளிலிருந்து தன் கையை எடுத்த்தார். படக்கென்று தான் வந்த வழியே ஓடத்தொடங்கினார்.
செய்வதறியாது நின்ற கணேசனின் அப்பாவும் நண்பர்களும் அவர் பின்னே ஓடினார்கள். நீண்ட தூரம் ஓடி கணேசன் விபத்துக்குள்ளான இடத்துக்கு வந்து அவன் விழுந்த இடத்தைப் பார்த்து ஐயோ….. ஐயோ….. நான் என்ன காரியம் செய்துவிட்டேன். இறiவா….. இறiவா… என்னை மன்னித்துவிடு என்று அழுதபடி அவன் சைக்கிளைத் தேடினார். நடுவீதியில் இருந்த சைக்கிள் யாரோ ஒருவரால் போக்குவரத்தின் இடைஞ்சல் கருதி பக்கத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கிப்போடப்பட்டிருந்தது. ஓடிச்சென்று அதைத் தூக்கினார். உன்னை நான் சரிப்படுத்துவுன் பாதுகாப்பன். என்ன பெருமப்படுத்துவன் என்று புலம்ப ஆரம்பித்தார்.
ஓருவாறு அவரைத்தேற்றி சைக்கிளை ஒரு வாகனத்தில் ஏற்றி சுந்தரத்தின் வீட்டில் இறக்கி விடும்படி சொல்லப்பட்டது. சுந்தரத்தை அழைத்துக்கொண்டு வைத்தியசாலை சென்றனர். கணேசன் விருப்பப்படி அவனது உடல் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உறுப்புக்கள் மேலும் ஐந்து பேருக்கு பொருத்தப்பட்டது. கண்மணி உடல் நலம்தேறி வீட்டுக்கு வந்தாள். அவள் அதிர்ச்சிக்குள்ளாகும் விடயங்கள் சொல்லக்கூடாத காரணத்தார் கணேசன் இறந்த விடயமோ அவனது இதயம் தான் அவளுக்குப் பொருத்தப்பட்டத என்பதோ சொல்லப்படவில்லை. அவள் கணேசனுக்காய் காத்திருந்தாள். ஒவ்வொரு விநாடியும் அவனுக்காய் துடித்தது. அது கணசனாகவே துடித்தது… கணேசன் வெளிநாடு சென்றதாக கண்மணிக்கு சொல்லப்பட்டது.
சுந்தரம் சைக்கிள் கடையை திறந்தார். கணேசனின் சைக்கிள் முன்னால் இருந்தது. அதைப்பார்க்கும் போதெல்லாம் அவருக்கு கணேசன் முன்னால் நிற்பதுபோல தோன்றும். “ஒத்த ரூபாய்க்கு பெறுமதியில்லாதவன் தானேடா நீ” என்று கணேசனை அவர் பேசியது நினைவு வந்து போகும். திரும்பி மகளைப் பார்ப்பார். அவள் இதயத்தில் கணேசன் இருந்து “என்ன மாமா…. எப்படி இருக்கிறீங்க” என்று கேட்பது போல தோன்றும். “நீ ஒத்த ரூபாய்க்கு பெறுமதியில்லாதவன் இல்லை. நீ தெய்வம். வாழும் கடவுள்…. நீ என் சாமிடா…. கணேசா” என்று கூறிக்கொண்டு அவன் சைக்கிளைத் தொட்டுக் கும்பிட்டு பின்னர் தன் வேலையைத் தொடங்கினார். பணம் என்னடா பணம் குணம் தானடா நிரந்தரம் எனும் பாடல் றேடியோவில் ஒலிக்கத் தொடங்கியது.
எழுத்தாளர் .ஜே.ஜே,
பாசையூர்,யாழ்ப்பாணம்