உலகின் அதிநீளமான மின்னல் 768 கி.மீ 2020 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் மின்னியிருக்கிறது.

உலகின் காலநிலை அவதானிப்பு மையம் (WMO) டெக்ஸாஸ், லூயிசியானா,மிசிசிப்பி ஆகிய மூன்று அமெரிக்க மாநிலங்களினூடாக மின்னலொன்றே உலகின் அதிநீளமான மின்னல் என்று அறிவித்திருக்கிறது. அந்த மின்னலின் நீளம் 768 கி.மீற்றராகும். 2018 இல் பிரேசிலில் மின்னிய 709 கி.மீ மின்னலே அதற்கு முன்னர் வரை அதி நீளமானது என்ற சாதனையை அடைந்திருந்தது.

அதிநீண்ட நேரம் காட்சியளித்த மின்னல் மார்ச் 04, 2019 இல் ஆர்ஜென்ரீனாவில் கவனிக்கப்பட்டது. 16.73 வினாடிகள் மின்னிய அது அதற்கு முன்னர் பிரான்ஸில் 2012 இல் 7.74 வினாடிகள் ஒரு மின்னல் காட்சியளித்திருக்கிறது.

சாதாரணமாக ஒரு மின்னல் 16 கி.மீ நீளமானது. அது ஒரு வினாடிக்குக் குறைவாகவே மின்னுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்