நிழல் விழுதாக

உச்சி வெயில்
பிச்சி உதர
பிஞ்சி உடல்
வெப்பம் தாங்க
தலைக்கு மேலே சுமை
குடையாக…

தரை மீதிலே
நிழல் விழுதாக

மனதில் வைரமாய்
பதித்தக் கனவை
வெற்றிக்கு வித்தாக்கி
வானில் மின்னிடும்
நாளைய தலைமுறையின்
நெடுஞ்சாலை பயணம்

எழுதுவது : ம.அபிமாலா
மலேசியா