இரண்டாயிரத்து இருபத்து இரண்டே…..

தொற்றை தந்து
தொல்லை தராதே…
சீற்றங்களால் – நீ
எல்லை மீறாதே…

வஞ்சக ரிடம்
கொள்ளை போகாதே…
அஞ்சுபவரை
கெஞ்ச வைக்காதே…

அறம் செய்வதில்
அசந்து நோகாதே…
கரம் கொடுப்பதில்
கடிந்து கொள்ளாதே…

தரம் மிக்கவரை
தண்டனை செய்யாதே…
சிரம் காக்கும்
தர்மத்தை மறக்காதே…

வறுமைகளை
வாரி பூசாதே…
சிறுமை களை
ஏவி ஏசாதே…

உழைப்பிற்கேற்ற
கூலியை பறிக்காதே
முயற்சிக்கேற்ற
வெற்றியை தடுக்காதே…

பிணிகள் உருவில்
பணியை சிதைக்காதே…
கனி யாவதற்கு முன்
பிஞ்சினை வதைக்காதே…

நம்பிக்கையினால்
அடி எடுத்து வைக்கிறோம்-உம்
தும்பிக்கையினால்
அரவணைத்துக் கொள்வாய்…!!!


எழுதுவது: வெண்பா பாக்யா