சிறப்பாக நடைபெற்ற மண்மகிழ் நிகழ்வு|பேராசிரியர் சி.விஜயகுமார் அவர்களை கௌரவித்த மக்கள் நிகழ்வு
மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மண்மகிழ் நிகழ்வு கரவெட்டி, மத்தொனி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அண்மையில் பேராசிரியராக பதவிநிலை உயர்வு பெற்ற பேராசிரியர் திரு.சின்னத்துரை விஜயகுமார் அவர்களை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வாக மக்களின் அரங்க நிகழ்வாக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நிகழ்வை கரவெட்டி மத்தொனி விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
ஊரின் எல்லையில் இருந்து கௌரவிக்கப்பட்ட பேராசிரியர் அவர்கள் , கல்வியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் ,மக்கள் பலரும் இணைந்த பவனியாக அழைத்துவரப்பட்டார் .
நிகழ்வுக்கு ஓய்வுநிலை அதிபர் திரு இராகவன் அவர்கள் தலைமை தாங்கினார்.
வரவேற்புரையை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை உபதவிசாளரும் முன்னாள் அதிபருமான திரு பொன்னையா அவர்கள் ஆற்றினார்.
தொடர்ந்து பேராசிரியருக்கான கௌரவிப்பு உரைகளை ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு அம்பலவாணர் அவர்களும், ஓய்வுநிலை வடமாகாண கல்விப்பணிப்பாளரும் விக்கினேஸ்வரா கல்லூரி பழையமாணவர் சங்கத்தலைவருமாகிய திரு வை.செல்வராசா அவர்களும், யாழ்பல்கலைக்கழக கல்வியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.ஆ.நித்திலவர்மன் அவர்களும், யாழ் போதானா வைத்தியசாலை, பொது வைத்திய நிபுணர் திரு சிவராமன் அவர்களும், யாழ்பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் நிமலதாசன் அவர்களும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு கேதீஸ்வரன் அவர்களும், யாழ்பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் திரு சிவலிங்கராஜா அவர்களும், நிகழ்த்தியுள்ளனர்
தொடர்ந்து அமரர் வீரகத்தி மணிமாறன் அவர்கள் நினைவாக இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திரு சின்னத்துரை விஜயகுமார் அவர்களை அரங்கத்தில் கௌரவித்ததனைத்தொடர்ந்து அவரின் ஏற்புரையும் இடம்பெற்றது.
கல்யியால் உயர்ந்த மைந்தனை அவர் வாழ்ந்த மண்ணின் மக்களால் மாண்பேற்றப்பட்ட சிறப்பு நிகழ்வாக இனிதே மண்மகிழ் நிகழ்வு நிறைவுற்றது.