தென்றல்
காதோரம் கிசுகிசுக்கும் தென்றலே!
கானம் பாடுவதேனோ இலைகளிலே?
கனமில்லா தூசிகள் பறப்பதும் உன்னாலே!
கார்மேகங்களை அசைக்கின்றாய்
முன்னாலே!
கடுமழை வருகின்றதே பின்னாலே!
தோழராகவும் அரவணைக்கின்றாய்!
தோல்களிலும் பரவுகின்றாய்!
தீயவற்றைத் துடைக்கின்றாய்!
தினம் உயிர்வளி(ழி)யே என்னைப் புதுப்பிக்கின்றாய்!
தேவைகளை உள் தேக்கி
தீமைகளை வெளியாக்கி
தரம் பிரிக்கக் கற்பிக்கும் தென்றலே!
தரணியில் வாழ்வோர்க்கு நீதானே தண்டலே!
எழுதுவது : சி.ம.அபிமாலா
, மலேசியா