நம் கல்லூரி
பள்ளி பயணத்தை முடித்து கல்லூரி பயணத்தை தொடரும் பயணிகளாய் , கல்லூரி என்னும் பேருந்தில்!
அரசு நிர்வாகத்தின் அரசிகளாய், அணிதிரண்டோம் இருபத்தி இரண்டு பேர்களாய்!
நண்பர்கள் கூட்டம் பெருகிட அரட்டைகளும் அதிகரித்தன!
முத்தான முதல்வருடனும், செயலில் சிறந்த செயலாளருடனும், பேரன்புமிக்க பேராசிரியர்களிடம் சத்தான கல்வியை கற்றோம்!
தமிழ்ப் புலமையோடு, இந்தி மொழியையும் கற்றறிந்தோம்!
ஏணிகளாய் பேராசிரியர்கள் விளங்க, பற்பல போட்டிகளில் பரிசுகளை தட்டினோம் !
கணிதத்தில் சதம் அடித்து கல்லூரி பெயரினை கம்பீரமாக உயர்த்தினோம்!
சுதந்திர தினத்தில், சுதந்திரக் கொடியை பறக்க விட்டு சுற்றுப்பயணத்தில் அரசு கல்லூரி பட்டாம் பூச்சிகளாய் சுற்றித் திரிந்தோம்!
ஆண்டுவிழாவில் காட்டினோம் எங்களின் ஆட்டத்தை!
குடியரசு தினத்தை குளித்து
குதூகளித்தோம் ஜேடர்பாளையத்தில்!
சுற்றுலாவை, இன்ப அருவியில் நனைந்த மகிழ்வான பறவைகளாய் பறந்து திரிந்து ரசித்தோம் !
அரசு நிர்வாகத்தின் இளவரசிகளை இப்போது இரண்டாம் ஆண்டில்!!
எழுதுவது
சீ. அல்ஸொய்மா
1-முதுநிலை கணிதம்
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி