இந்தியாவின் புலம்பெயர்ந்த பெண்ணை அமெரிக்கா தனது நெதர்லாந்துத் தூதுவராக்கவிருக்கிறது.

இந்தியாவில் பிறந்த ஷெவாலி ரஸ்டான் டுக்கல் [Shefali Razdan Duggal] என்ற மனித உரிமைகள், பெண்ணுரிமைகளுக்காகப் போராடும் இயக்கத்தைச் சேர்ந்த 50 வயதானவரை ஜோ பைடன் தனது நெதர்லாந்துத் தூதராகத் தெரிவுசெய்யவிருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான இவர் தனது பல சமூக சேவைகளுக்காகப் பதக்கங்கள் பெற்றிருக்கிறார்.   

காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்ட ஷெவாலி ரஸ்டான் டுக்கல் இந்தியாவின் உத்தர்பிரதேசத்தில் பிறந்தவர். தனது இரண்டாவது வயதில் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர். கலிபோர்னியாவில் குறிப்பிடத்தக்க அரசியல் பலமுள்ளவரான இவர் 2008 இல் ஒபாமாவின் தேர்தலுக்காகவும், அதையடுத்து ஹிலரி கிளிண்டனின் தேர்தலுக்காகவும் செயற்பட்ட குழுக்களில் முக்கிய இடம் வகித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *