தீக்கிரையான நொட்ரடாம் தேவாலய புனருத்தானரத்தின்போது பல கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பாரிஸ் நகரத்திலிருக்கும் சுமார் 850 வருடங்களுக்கும் முன்னர் கட்டப்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி ஏப்ரல் 2019 இல் தீக்கிரையானது. சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானதும், பாரிஸ் நகரத்தின் முக்கிய சின்னங்களில் ஒன்றானதுமான அத்தேவாலயத்தைப் புனருத்தாரணம் செய்ய உலகின் பல பாகங்களிலிலிருந்தும் உதவிகள் குவிந்தன. அதையடுத்துத் தேவாலயத்தை மீண்டும் முடிந்த அளவு திருத்தம் செய்யும் வேலைகள் ஆரம்பமாகித் தொடர்ந்து வருகின்றன.

புனருத்தாரண வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது தேவாலயத்தின் தரைமட்டத்தின் கீழ் பல கல்லறைகள் இருந்ததை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள்.  அத்துடன் அழகான வேலைப்பாடுகளாலான சவப்பெட்டி ஒன்றையும் கண்டெடுத்தார்கள். 14 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் அப்பெட்டி அச்சமயத்தில் சமூகத்தில் முக்கிய பதவியனுபவித்தவர் ஒருவருடையது என்று நம்பப்படுகிறது.  

சாள்ஸ் ஜெ போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *