ஏக்கமும்! எதிர்பார்ப்பும்!
சொல்லாத கவிதைகள்!
பெண் பிள்ளைக்கு ஏங்கிக் கிடக்கிறேன்!
திருமணம் ஆன ஓராண்டில் கருத்தரித்து!
தவமின்றி ஆண் மகவிற்குத் தாயானேன்!
அழகுடனும், ஆரோக்கியத்துடம், அவன் வளர்வதை அனுபவிக்கிறேன்!
அவனுக்கு துணையாக சாகோதரம் வேண்டி!
மீண்டும் தாயாக ஆசை! இரண்டாம் மகவிற்கு!
அதும் பெண் பிள்ளையாய் பெற்றெடுக்க!பேராசை!
அனுதினமும் இறைவனை வேண்டுகிறேன்!
மூன்று ஆண்டு கழிந்து விட்டது!
மகவே உனை எதிர்நோக்கி!
இன்னும் கூட காத்திருப்பேன்,
நிச்சயம் நீ வருவாய் எனக்காக!
நம்பிக்கை உள்ளது!உன் மீதும், உனை எனக்கு தரப் போகும் இறைவன் மீதும்!
மீண்டும் கருத்தரித்து, அணு அணுவாய் உனை ரசித்து!
பத்து மாதம், பத்திரமாய் உனை சுமந்து! முத்தாகப் பெற்றெடுக்க!
பெற்றெடுக்கையில்,செவிலியிரோ? மருத்துவரோ! பெண் பிள்ளைப் பிறந்திருக்கு!
எனக் காதோரம் தேன் பாய! உன் நெற்றியில் முத்தமிட்டு!
அழகுத் தமிழில் பெயர் சூட்டி, ஆராரோ பாட்டு பாடி!
நீ தூங்க நான் தூக்கம் கெட!
அம்மா என நீ அழைக்க!
மகளே என நான் அழைக்க!
அன்னை தந்தையோடு அண்ணனும் உடனிருப்பான்!
உனைக் கொஞ்ச!
உன் கெஞ்சல் கேட்க!
தவமாய் தவமிருக்கேன்! நீ கிடைக்கும் நம்பிக்கையில்!
எழுதுவது : சரண்யா ஆனந்த் , சேலம்.