இனப்படுகொலையின் உச்சம் முள்ளிவாய்க்கால்
ஓர் இனத்தின்
உரிமைகள் மறுக்கப்பட்ட
நிலையில்
அவ் இனம்
தமது உரிமைகளை
பெரும்
நோக்குடன்
ஆயுதம் தாங்கி
போராட வேண்டிய
சூழல் ஏற்பட்டது…!
பல
ஆண்டு யுத்தகளமாக
மாறியது எம் தேசம்…!
மண்ணில் புதைக்கப்பட்ட
கண்ணி வெடிகள்
காலை பிய்த்து
எடுத்தது…!
பதுங்கு குழியும்
பற்றை தரையும்
வாழிடமாக மாறியது…!
பல மனித
கடத்தல்கள்
அரங்கேறின…!
“செம்மண்”
புதைகுழியாகவும்
மாறின…!
A9 வீதியும்
மூடப்பட்டது…!
வீதிகள்தோரும்
சோதனை சாவடிகள்
என்ற பெயரில்
சோதனை செய்து
சோதனைக்குள்ளாக்கினர்….!
ஒரு நூலகம்
திறங்கள்
ஆயிரம் சிறைச்சாலைகள்
மூடப்படும் என்பது
அறிஞர் வாக்கு
ஆசியாவின் அற்புதமாக
விளங்கிய
அறிவு களஞ்சிய
யாழ் நூலகத்தை
எரித்து சாம்பலாக்கினர்…!
பல நாட்கள்
இப்படி தான்
இருந்தது …!
பல தேச சக்திகளுடனும்
பல துரோகிகளுடனும்
இணைந்து
18.05.2009
அன்று முள்ளி வாய்காலில்
இரத்தாலும் கண்ணீராலும்
பல தசாப்த
யுத்தம் நிறைவு
பெற்றது…!
நிறைவடைந்தது
என்னவோ
யுத்தமாக
இருக்கலாம்…!
ஆனால்
எம்
இதயம்
இன்னும் இயங்கி
கொண்டு தான்
இருக்கிறது..!
எழுதுவது : திகன கலை