சிரிப்பு

மழலையின் சிரிப்பு
நம்மையும்
சேர்த்து சிரிக்க வைக்கும்!

சிறு வயதினரின்
சிரிப்பு
கள்ளமில்லாமல்
இருக்கும்!

குமரியின் சிரிப்பு
சில்லறை
சிதறியது
போலிருக்கும்!

அம்மாவின் சிரிப்பு
நம்மை
அரவணைக்கும்!

அப்பாவின் சிரிப்பு
ஆனந்தம்!

முதுமையின் சிரிப்பு
கொள்ளை
ஆனந்தம்!

சிரிப்பு என்பது கலை!

சிரிப்பு என்பது கருவி!
சிரிப்பு என்பது
மந்திரம்!

சிரிப்பு என்பது மகத்துவம்!

சிரிப்பு நம்
களைப்பைத் துரத்தும்!

சிரிப்பு என்பது
அனைவருக்கும்
ஒரு நல்ல மருத்துவம்!

சிரித்து
சந்தோஷமாக
வாழ்வோம்!

எழுதுவது : விஜயலட்சுமி