வேண்டு(ம்) வரம் – கவிநடை
இறைவா
என்னைப் புதியவளாய் இயற்றிட என்மனம் தெளிவாய் திறந்திட தினம்தோறும் யுத்தம் செய் எதிர்மறை எண்ணங்களை என்னில் துரத்திடுவாய்…
வாழ்வினில் வெறுமையை நீக்கிடுவாய்
வரிகளில் வலிமையைத் தந்திடுவாய்…
போகும் பாதைகளின்
முட்களை புற்களாய் மாற்றிடுவாய்…
காணும் மனிதர்களின் கவலைகள் யாவையும்
காற்றில் பறக்கச்
செய்திடுவாய்…
போதும் போதும் எனும்
புகழ் மணம்
பொழிந்து விடுவாய்…
மண்ணும் பொன்னும்
அல்லாத மங்காத
வாழ்வினை அளித்திடுவாய்…
மந்திபோல் மரந்தாவும்
அலை மனதை வென்றிடுவாய்…
விட்டுவிட்டுப் பின்தொடரும் வினைகளை
என்னைத் தொட்டுவிடாது தூரத்திடுவாய்…
பழமை மறவாமல்
புதியனவற்றை ஏற்றிடும் புத்துயிரைப்
போற்றிடுவாய்…
எழுதுவது : மாலையம்மாள்@ ராசாத்தி
ஸ்ரீ வில்லிபுத்தூர்