குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்!
இன்றைய குழந்தைகள் தானே நாளைய நம் தூண்கள். அவர்களுக்காக நாம் இன்று ஒதுக்கும் நேரங்களே நாளை நம் முதுமைக்கு சேர்த்து வைக்கும் முத்தான நிமிடங்கள்.
ஆங்கிலத்தை இன்றைய பள்ளிகளும் உலகும் எப்படியாவது கற்பித்துவிடும். ஆனால் நம் தாய்மொழியை ( தமிழ் மற்றும் அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும்) நாம் தானே கற்பிக்க வேண்டும்.
காலை வணக்கம் தொடங்கி நன்றி, மன்னிப்பு, சிறப்பு, நல்லது என சிறு சிறு சொற்களை அன்றாடன் பயன்படுத்த மறவாதீர்கள். மற்ற மொழிகள் உரையாடலை மட்டுமே பரிமாறும். நம் தாய்மொழித் தமிழ் மட்டும்தான் உணர்வுகளையும் சேர்த்தே பரிமாறும்.
இத்தகு சிறப்பு பெற்ற மொழியைப் பேணிக்காப்பது நம் பொறுப்பு அல்லவா? எப்படி செய்வது? தினமும் நீதிக்கதை கூறுங்கள், இலக்கியங்களை சொல்லிக்கொடுங்கள்.
இன்று நாம் நம் தலைமுறைக்காக எடுக்கும் சிறு முயற்சி வித்தாக முளைத்து நாளை விருட்சமாக வளர்ந்து நிழலையும், கண்களையும் தந்து நிச்சயம் தமிழ் காக்கும் என்ற நம்பிக்கையை முன் வைத்து, குழந்தைகளுக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால் உங்கள் பொன்னான நேரத்தை பரிசளியுங்கள்.
நல்லதை பயிற்றுவிப்போம். அல்லதை விலக்க வைப்போம். நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்போம். “காலம் பொன் போன்றது”
எழுதுவது ; சரண்யா ஆனந்த், சேலம்.