சொல்லத் தவறியவை
அதிகாலைத் துயில் எழுந்தால் நன்மை
என சொல்ல தவறினோம்…
பின்னிரவு வரை விழித்திருத்தல் கேடு
என சொல்ல தவறினோம்…
எண்ணெய் குளியல் உடலுக்கு நன்மை
என சொல்ல தவறினோம்…
ரசாயன(Soap, shampoo) குளியல் மேனிக்கு தீமை
என சொல்ல தவறினோம்…
பாரம்பரிய அறுசுவையுணவு உண்டாள் நன்மை
என சொல்ல தவறினோம்…
அண்டைநாட்டு துரித உணவுண்டாள் தீமை
என சொல்ல தவறினோம்…
பாரம்பரிய மூலிகை மருத்துகள் ஆரோக்கியத்திற்கு நன்மை
என சொல்ல தவறினோம்…
வீரியமான ரசாயன மருந்துகளினால் தீமை
என சொல்ல தவறினோம்…
அண்டை அயலாருடன் நட்புறவாடுதல் நன்மை
என சொல்ல தவறினோம்…
செல்லிடப்பேசியில் நட்புறவாடுதல் தீமை
என சொல்ல தவறினோம்…
ஓடிவிளையாடினால் உடலும்மனமும் நலம் பெறும்
என சொல்லத் தவறினோம்…
கைப்பேசியில் விளையாடினாள் உடலும்மனமும் சோர்வடையும்
என சொல்ல தவறினோம்…
நம் பாரம்பரிய கலாச்சாரம்தான் நன்மை
என சொல்ல தவறினோம்…
அண்டை நாட்டு கலாச்சாரம் தீமை
என சொல்ல தவறினோம்…
வாழ்வியல் முறையை கற்பிக்க தவறினோம்
வாழ்க்கையை வாழத் தவறினோம்…
எழுதுவது :
திருமதி லாவண்யா பாலாஜி
சென்னை.