தென்னாபிரிக்காவுடன் தோற்றது இந்தியா| T20 உலகக்கிண்ணம்
T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டிகள் நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைக் எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் சூர்யகுமார் யாதேவ் 40 பந்துகளில் எடுத்த 64 ஓட்டங்களே ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கை ஆகும். தென்னாபிரிக்க அணி சார்பில் லுங்கி நிகிடி 4ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களை கொடுத்து பெற்ற 4விக்கெட்டுக்கள் மற்றும் Wayne Parnell 4 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்து பெற்ற 3விக்கெட்டுகள் ஆகக்கூடிய விக்கெட்டுக்கள் ஆகும்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆட்ட நிறைவில் 2 பந்துகள் மீதமிருக்கையில் 137 ஓட்டங்களை பெற்று வெற்றியைப்பதிவு செய்தது.
தென்னாபிரிக்க அணியின் சார்பில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது பெற்ற 59 ஓட்டங்கள் , மற்றும் ஏய்டன் மர்க்ரம் பெற்ற 52 ஓட்டங்கள் இணைந்து தென்னாபிரிக்காவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.
போட்பியின் ஆட்ட நாயகனாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய லுங்கி நிகிடி அறிவிக்கப்பட்டார்.
அதன்படி தென்னாபிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் முதன்நிலைக்கு முன்னேற இந்திய அணி இரண்டாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.