போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் பெண்கள் |
அதிர்ச்சி தரும் தரவுகள்
சிறீலங்காவில் பெண்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை தேசிய அபாயகர மருந்துகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி லக்மீ நிலங்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் பாவனை, பெண்களின் அழகு கலை நிலையஙாகளினூடாக விநியோகிக்கப்படுவதாக குறித்த அதிகாரி அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாடசாலை மாணவிகளே இலக்கு வைக்கப்படும் நிலையில் , தவறான பொருட்களை பயன்படுத்த மறுக்கும் நிலை பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாக வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். அதிகளவான பெண்களிடம் தற்போது ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்படுகிறது
அடிக்கடி அழகு கலை நிலையங்களுக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய அபாயகரமான மருந்துகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.