வாணி ஜெயராம் குரல் ஓய்ந்தது
பிரபல இந்திய பாடகி வாணி ஜெயராம் அவர்கள் தமது 77வது வயதில் காலமானார்.
அவர் கடந்த 50 வருடங்களுக்கு தமிழ் உட்பட இந்திய பல்வேறு மொழிகளில் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடிய பெருமை இவருக்கு இருக்கிறது.
நாற்பதுகளில் திரைப்படத்துறைக்கு அறிமுகமாகியிருந்தவர் அமரர் வாணி ஜெயராம் அவர்கள்.
1971ம் ஆண்டு ஹிந்து இசையமைப்பாளர் வாசந் தேசாயியின் இசையில் குட்டி திரைப்படத்துக்காக பாடிய ஹம் கோ மான் கி சக்தி தேனா பாடலின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இவர்.
ஈழத்தின் தேச உணர்வுடன் மிக்க பாடல்களையும் தந்த மறக்கப்பட முடியாத பாடகராக எம்முடன் இசையாக வாழ்ந்துகொண்டிருக்ககூடிய பாடகி அமரர் வாணி ஜெயராம் அவர்கள்.
பல்வேறு விருதுகளையும் பெற்ற பெருமைக்குரிய பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்கு அண்மையில் இந்திய அரச விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு பலரும் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை பகிர்ந்து வந்திருந்தனர்.
அவர் இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி மஹாதேவன், சக்கரவர்த்தி, இளையராஜா , ஏ ஆர் ரஹ்மான் என பல்வேறு இசை விற்பன்னர்களின் இசையில் பல்வேறு காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது