துவங்கியது ஹாட்லியைற்ஸ் நடை(Hartleyites Walk)|சவாலுக்கு நீங்கள் தயாரா ?

தேக ஆரோக்கியத்தை முக்கியத்துவப்படுத்தி உலகளாவிய ரீதியில் பலரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் வருடா வருடம் ஏற்பாடு செய்யும் ஹாட்லியைற்ஸ் நடை/Hartleyites Walk இந்தவருடமும் ஐக்கிய இராச்சிய Hartleyites Sports Club UK இனால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதம் 1ம் திகதி துவங்கிய இந்த Hartleyites walk, ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

இதில் நடை நிகழ்ச்சியில் ஈடுபடுவோர் குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி இந்த மாதம் முழுவதும் ஈடுபடுவது வழமையாகும்.

நடை மற்றும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவோர் குறித்த இந்த மாதத்தில் 100 km ஐ இலக்காகவும், சைக்கிள் ஓட்டத்தில் ஈடுபடுவோர் 300 km இலக்காகவும் வைத்து இந்த சவாலில் பங்குபற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ளவர்கள் குறித்த சவால் நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *