கலையரசி 2023|லண்டனில் யாழ் இந்துவின் இன்னுமோர் பிரமாண்ட விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராட்சிய கிளை பெருமையுடன் வழங்கும் பிரம்மாண்ட விழா இந்த வருடமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“வந்தனம் செய்யவே வருடத்தில் ஒருநாள் வருவாள் அன்னை கலையரசி” என்ற வாசகத்துடன் ஓவ்வொரு ஆண்டும் கலையரசி என்று அழைக்கப்படும் இந்த கலைவிழாவை யாழ்/ இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராட்சிய கிளை பெருமையுடன் மிக பிரமாண்டமாக நடாத்தி வருகிறார்கள். அந்த வகையில் இவ்வருடமும் மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது யூலை மாதம் முதலாம் திகதி 2023 ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில், Dorking Hall மண்டபத்தில் மிக பிரமாண்டமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த மாபெரும் நிகழ்வில் தென்னிந்தியாவிலிருந்து பிரபலமான , மக்கள் மனங்கவர்ந்த பாடகர்களான PUNYA, SAXOPHONE LAVANYA, NIVAS மற்றும் SAKTHI அவர்களும் பங்குகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் சிறப்பம்சமாக பாடகி Punya அவர்கள் ஈழத்தை பூர்வமாக கொண்ட பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் பாடகி என்பதும் இவர் இந்தியாவில் நடைபெற்ற Super Singer நிகழ்ச்சியில் இல் பங்குபற்றி தன் அதீத திறமையால் பலரின் மனங்களில் இடம்பிடித்து பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் பிரம்மாண்ட நிகழ்வை கண்டு களிக்க வருமாறு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் உறவுகள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

எழுதுவது : நகீரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *