“Hartleyites Summer Fiesta”|இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் மைதான நிகழ்வு நாளை

ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழகம் (Hartleyites Sports Club Uk) ஏற்பாடு செய்யும் கோடைகால மைதான நிகழ்வான Summer Fiesta, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 14ம் திகதி இடம்பெறவுள்ளது.

வருடாவருடம் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வில், பாவலன் ஞாபகார்த்தமாக வெற்றிக்கிண்ண மென்பந்து துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டியும் வழமைபோலவே இடம்பெறவுள்ளது.

குழந்தைகளுக்கான விறுவிறுப்பான போட்டிகளும், மைதான விளையாட்டுகளும் இடம்பெற ஏற்பாடாகியுள்ள இந்த நிகழ்வில் குடும்பத்தினரோடு மகிழ்வுடன் பங்குபற்றும் நிகழ்வுகளும் வழமைபோல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹாட்லியைற்ஸ் விளையாட்டு கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் கழக நலன்விரும்பிகள் மற்றும் கழக வீரர்கள் பங்குபற்றும் நட்புரீதியிலான கிரிக்கெட் போட்டி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் இலவசமான இந்த நிகழ்வில் ஹாட்லியைற்ஸ் மட்டுமல்லாது கழக நலன்விரும்பிகள் பலரும் கலந்துகொள்வதும் , ஆதரவை வழங்குவதும் இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

காலை 10மணிக்கே ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு , கடந்த வருடத்தைப்போலவே இந்த வருடமும் Watford இல் அமைந்துள்ள Bushey Cricket Club மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுதுவது : யோதிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *