ஹாட்லி எதிர் ராகுல நாளை| முனைகளின் சமர்| The Battle of the Ends 2023
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி அணி எதிர் மாத்தறை ராகுல கல்லூரி அணி மோதும் துடுப்பெடுத்தாட்ட வருடாந்த The battle of the Ends/முனைகளின் சமர் நாளை சனிக்கிழமை 08/04/2023 இடம்பெறவுள்ளது.
நான்காவது தடவையாக இடம்பெறும் இந்த போட்டி இந்த வருடம் ஹாட்லிக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.


அவுஸ்ரேலியாவில் வதியும் இரு கல்லூரிகளின் பழையமாணவர்களும், கல்லூரிகளில் அன்றைய நாள்களின் துடுப்பாட்ட வீரர்களுமான மணிமாறன் மற்றும் விஜேசிறீவர்த்தன ஆகியோரின் ஆதரவில் குறித்த போட்டி நடைபெற்று வருகிறது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரபல தற்காப்புக்கலை ஆசிரியரும் பல விருதுகளை வென்றவரும் யோகா கலை நிபுணருமான திரு மாணிக்கவாசகம் இரட்ணசோதி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

குறித்த போட்டி சிறீலங்காவின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளின் பிரபல கல்லூரிகளின் அணிகளுக்கிடையிலான போட்டி என்பதால் பலரின் பார்வையையும் திரும்ப வைத்துள்ள போட்டி ஆகும்.
2017 இல் மாத்தறை ராகுல கல்லூரி மைதானத்தில் துவங்கிய இந்த முனைகளின் சமர் இந்தவருடம் ஹாட்லிக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.