முள்ளிவாய்க்கால்
உயிரும் உணர்வும் உடலை விட்டு
உதிரம் சிந்த உபாதை பட்டு
உரிமை தாகம் மறுக்கப்பட்டு
மரித்தோம் நாங்கள் அல்லல்பட்டு
நந்திக் கடலில் குருதி தோய
குண்டுகளெம் உடலில் பாய
ஓடியொளிந்தோம் பாதம் தேய
யாரும் இல்லை தோளில் சாய
இறந்த தாயின் உடலம் தன்னில்
இருந்து பாலைக் குடித்த பிள்ளை
இந்தக் கொடூரம் பாரிலெங்கும்
இதுவரை நாம் பார்த்ததில்லை
காயம் பட்ட மக்கள் தன்னைக்
காவி செல்ல யாரும் இல்லை
கொன்று குவித்த கயவனுக்கு
கொல்லும் சாவும் வருகுதில்லை
கள்ளத் தோணி கருணா நிதியும்
கண்டத் தலைவர் பொல்லாச்சதியும்
காவு கொள்ளும் காலன் விதியும் கண்ணை மூடி தியானி புரியும்
எவற்கும் தெரிந்த முள்ளிவாய்க்கால் எமக்காய் கண்ணீர் சிந்துமொருக்காய் நித்தம் துன்பம் ஆடிப்பெருக்காய் நினைவு கூரக் கூடும் பொறுப்பாய்
அடிமையானோம் அஞ்சி அஞ்சி வாழ்க்கைவாழ்ந்தோம் கெஞ்சி கெஞ்சி
மரித்தார் மறவர் குருதி சிந்தி
முடிவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
கவிஞர் ஜே.ஜே.
யாழ்ப்பாணம்