குரங்குகளின் சீன பயணம் தடை….!
சீனாவிற்கு இலங்கையிலிருந்து குரங்குகளை அனுப்ப போவதாக அண்மையில் தெரிவிக்கபட்டிருந்தது. எனினும் இலங்கையில் இருந்து Toque macaques என்ற குரங்கு இனம் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன் முறையீட்டு நீதி மன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.
குரங்குகள் மக்கள் வாழும் இடஙகளுக்கு வந்து பழவகைகளையும்,இதர பொருட்களையும் எடுத்து செல்கின்றமை குறிப்பிடதக்கதது.
இருப்பினும் காடுகளை அழித்து நகரமயமாக்கலில் ஈடுப்பட்டதன் விளைவாக தான் குரங்குகளிற்கு தகுந்த சூழல் இன்மையால் தான் இவ்வாறு வீடுகளுக்கு வந்து அட்டகாசம் செய்வதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இலங்கை நாட்டு விலங்குகளை இலங்கையர்கள் பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகும்.