சிறுமியை கடித்த குரங்குகள்..!

வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது

“அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தேன். பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்.,

அப்போது எனது மகள் முற்றத்தில் இருந்தார். திடீரென மகள் இருக்கும் இடத்திற்கு வந்த நான்கு குரங்குகள் அவரின் மீது பாய்ந்தன.

மகள் ஓட முற்பட்ட போது அங்கு விழுந்து விட்டார்.  அப்போது அவர் காலின் தொடை பகுதியை குரங்குகள் கடித்தன.

பின்னர் மகன்தான் குரங்குகளை விரட்டியடித்தார். சம்பவத்தின் பின்னர் மகளை உடனடியாக மாவனெல்லை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.

குரங்குகளுக்கு இரத்த ருசி பட்டால் குழந்தைகள் போன்று பெரியவர்களையும் குரங்குகள் கடிக்கக்கூடும் என்று வைத்தியர் தெரிவித்தார்.”

தற்போது குரங்குகள் அதிகமாக பெருகியுள்ள கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் குரங்குகள் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் எத்தனை முறை தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் குரங்குகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக மாவட்ட செயலகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *