சிகரெட்,மதுபானங்களின் விலை உயர்வடைகிறதா?
அனைத்து விதமான மதுபான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களம் அனைத்து வரிகளையும் உயர்த்தி உள்ளமையள இவ் விலை உயர்விற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக 300 ரூபாவிற்கும் அதிகமாக விலை உயரக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை (01.07.2023)இன்று முதல் அமுலாகும் வகையில் சிகரெட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இவ் சிகரெட்டுகள் தலா 5,15,20,25 ரூபாவினால் அதிகரிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விலை அதிகரித்தாலும் ,இதை பயன்படுத்துபவர்கள் இதன் பாவனையை குறைத்துக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.