Zee தமிழ் நிகழ்வில்… மலையக மாணவி…!

இலங்கையில் மலையகம் என்றாலே அழகு தான் அதிலும் கண்டி மாவட்டம் என்பது அழகிலும் பேரழகு….
இயற்கை அழகில் கண்டிக்கு நிகர் கண்டி தான். வேறெங்கும் இதற்கு கிளைகள் கிடையாது .அப்படியாபட்ட இடத்தில் ஒரு மாணவி தனது குரலால் அனைவரையும் ஈர்த்து இன்று இந்தியா நோக்கி சென்றுள்ளார்.

ஆம் ,கண்டி மாவட்டம் ,புசல்லாவ நயப்பன தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியான ஆஷினியே இவ்வாறு புறப்பட்டுள்ளார்.இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சிகளில் ஒன்றான zee தமிழ் வழங்கும் “Sa Re Ga Ma Pa Lil Champs 2023” பங்கேற்கவே இவர் சென்றுள்ளார்.

மலையக மாணவர்கள் கஷ்டமான வாழ்க்கை சூழலுக்கு உட்பட்டவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். இருந்த போதிலும் இம்மாணவி இவ்வளவு தூரம் பயணித்து இருப்பது வரவேற்க தக்க ஓர் விடயமாகும்.

இன்னும் எம்மண்ணில் நிறை திறைமைகளோடு பல ஆஷினிகள் இருக்கிறார்கள் அவர்களும் வெகு விரைவில் வெளிவருவார்கள் என்பது கட்டாயம்.

zee தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆஷினி மலையகத்திற்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.அவரின பயணம் வெற்றிமிக்க தாய் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *