வானில் பறந்தது முத்து ராஜா…!
உயிர் பிரியும் நேரத்தை விட உறவுகள் பிரியும் நேரம் உன்னதமானது. இது மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் மாத்திரம் பொருந்தாது.மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கூட பொருந்தும்.
ஆம் இலங்கை மக்களோடு 22 ஆண்டுகள் ஒன்றாக பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக பயணித்த முத்து ராஜா தனது தாய் நாடான தாய்லாந்து நோக்கி புறப்பட்டது.
2021ம் ஆண்டு தாய்லாந்தால் வழங்கப்பட்ட யானை தான் முத்து ராஜா .இது அழுத்கம கந்தே விகாரையில் வசித்தது.
நாகவிகாரை ,தளதா மாளிகை என பல்வேறுப்பட்ட விகாரைகளில் பெரஹெர நிகழ்வுகளில் பங்கு பற்றி தனது சேவையை வழங்கி வந்தது.
முத்து ராஜா சுகயீன முற்ற நிலையில்,தெஹிவளை மிருக காட்சி சாலையில் 6 மாதமாக சிகிற்சை பெற்று வந்தது. முழுமையாக குணப்படுத்தும் நோக்குடன் தாய்லாந்து அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் மீண்டும் தாய்லாந்தில் வைத்து சுகப்படுத்த கேட்டது.அதற்கமைய தாய்லாந்தில் இருந்து வந்த குழுவினருடன் முத்து ராஜா புறப்பட்டது.இந்த பிரிவானது அனைந்து இலங்கை வாழ் மக்களையும் கவலைக்குட்படுத்தியுள்ளது.
இன்று காலை கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக 7.30 மணியளவில் ரஷ்யாவின் விசேட விமானத்தில் சென்றது.