பிரான்சும் போராட்டமும்
இந்த வாரம் சர்வதேச அளவில் முக்கிய பேசுபொருளாக விளங்கிய ஒன்று தான் பிரான்ஸ் போராட்டம்.
ஆம்,
17 வயது நெயில் எம் என்ற கார் சாரதியை பொலிஸார் சுட்டுக்கொன்றனர். இவர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புற நகர் பகுதியான நாண்டெர்ரே போக்குவரத்து நிறுத்ததில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டார்.
இதன் விளைவாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த போராட்டமானது வலுப்பெற்றது.இதன் போது 1200க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
இதன் போது 150க்கு அதிகமான மக்கள் கைதுசெய்யப்பட்டனர்.இதன் போது 25பொலிஸார் காயத்திற்குள்ளார்கள்.40 க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையானது.இந்த போராட்டமானது 5 நாட்களாக நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
அழகிய நகரம் பரிஸ் என்று அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறோம்.ஆனால் இன்று இந்த சிறுவனை கொன்றமையால் அழகிய நகரம் அழிவு நகரமாக மாற்றமடைந்திருக்கிறது.