இப்படியும் மாணிக்க கல் வர்த்தகம்
கருங்கற்களே இன்று அதிகப்படியான விலைக்கு விற்கப்படுகிறது இந்நிலையில் மாணிக்க கல்லின் விலை எவ்வளவாக இருக்கும்.அப்படி விலை உயர்வான மாணிக்க கல்லை வாங்கி விட்டு ஏமாற்றினால் எப்படி இருக்கும்.
இவ்வாறான சம்பவம் ஒன்று தான் பேருவளை பிரதேசத்தில் நடந்துள்ளது.
சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபரான வர்த்தகர் முறைப்பாட்டாளரான பேருவளை வர்த்தகரிடம் இருந்து 33 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா பெறுமதியான 09 நீல மாணிக்கற்களை பெற்று அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மாணிக்கக்கல் வர்த்தகரிடம் இருந்து 13 இலட்சத்து 50,000 ரூபா பெறுமதியான நீலக்கல் ஒன்றும் பெறப்பட்டு அதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இரண்டு மாணிக்கக்கல் வர்த்தகர்களுக்கு வழங்கிய 8 காசோலைகளை அந்த வங்கியில் ஒப்படைத்ததன் பின்னர் அவை பெறுமதியற்ற காசோலைகள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மாணிக்க கல் வர்த்தகர்கள் சந்தேக நபருக்கு அறிவித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.இதற்கமைய 39வயதுடைய ஜாஹேல பிரதேசத்தை சேர்ந்த மாணிக்ககல் வர்த்தகர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது.