ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிக்குமா..?
டொலரின் பெறுமதியானது கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்டது .ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக பொருட்களின் விலை உச்சத்தை அடைந்தது.இதனால் அன்றான உழைக்கும் மக்கள் அதிக கஷ்டத்தை எதிர்நோக்கினர்.
இந்த வகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த பாதீட்டு ஒத்துழைப்பு மற்றும் நலன்புரி உதவித்தொகையின் முதலாவது கொடுப்பனவாக 250 மில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறு ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் பொருட்களின் விலையும் குறைவடைய கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே தருணம் நேற்றைய தினம் லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்திருந்தமை குறிப்பிடதக்கது.
இதே வேளை ரூபாவின் பெறுமதி அதிகரிக்கின்றமை யானது ஒரு சாராருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் ,ஒரு சாராருக்கு கவலையை ஏற்படுத்திவுள்ளது.ஏனெனில் இன்றைய இளைஞர்கள் அண்மை காலத்தில் அதிகளவு online job என்று சொல்லக்கூடிய தொழில்களில் ஈடுப்பட்டனர்.இவர்கள் டொலர் மூலம் வருமானத்தை பெற்றனர். அவர்களுக்கு டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரிக்கின்றமையானது கவலை ஏற்படுத்தியுள்ள ஒரு விடயமாக அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிட தக்கது.