நுண்கலை கண்காட்சி
மத்திய மலைநாட்டில் இருக்கும் மாணவர்கள் படிப்பில் மாத்திரம் சிறந்தவர்கள் இல்லை, ஓவியம், நடனம், சங்கீதம் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
அண்மையில் கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலை மாணவர்களால் நுண்கலை கண்காட்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது.
இதில் மாணவர்களது ஓவியப்படைப்புகளும் ,புத்தாக்க செயற்பாட்டுகருவிகளும்,பற்பல ஆக்கங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிபர் ,கல்வி அதிகாரிகள் ,ஆசிரியர்,மாணவர்கள் ,பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இங்கு படைக்கப்பட்டிருந்த ஆக்கங்கள் அனைத்து மலையக மாணவர்களது படைப்பாக்க திறனை சீர்தூக்கி காட்டுகின்றமை குறிப்பிடதக்கது.