ஹராரேயில் நாளை சந்திக்கின்றன இலங்கை நெதர்லாந்து அணிகள்.
2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணப்போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது.
இதற்கமைய தகுதி காண் சுற்றுக்கள் தற்போது நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.
இந்நிலையில் நாளைய தினம் ஹராரேயில் இலங்கை மற்றம் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றமை குறிப்பிடதக்கது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதி வரை இப்போட்டிகள் நடைப்பெற இருக்கின்றது.இதில் 10நாடுகள் பங்கேற்கின்றன. இதில் 8 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன .இந்நிலையில் மிகுதி 2 அணிகளை தெரிவு செய்வதற்கான சுற்றுக்கள் சிம்பாபேயில் நடைப்பெறும் நிலையில் தான் நாளை இலங்கை ,நெதர்லாந்து அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடதக்கது.
கடந்த போடடிகளில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றது. அதே போல் நாளைய தினமும் இலங்கை அணி சிறப்பாக பிரகாசிக்குமா என பார்ப்போம்.