‘Titan’ஐ தேட மக்களின் வரி பணம்…!
காதலின் சின்னம் கடலில் மூழ்கி இருந்தாலும் பல இதயங்கள் இன்னும் காதலித்து கொண்டு தான் இருக்கின்றன இந்த காதலின் சின்னமான, டைடானிக்கப்பலை.
அந்த வகையில் அண்மையில் டைடானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 நபர்கள் மீண்டும் உயிருடன் திரும்ப வில்லை .இவர்கள் ஐந்து பேரும் (ocean gate titan)டைடன் என்ற நீர் மூழ்கி கப்பலில் பயணித்தனர். இவர்கள் பயணித்த சில மணிநேரத்தில் காணமல் போயினர் .இதன் விளைவாக ,டைட்டனை கண்டு பிடிப்பதற்காக அமெரிக்கா ,கனடா என பல நாடுகள் மும்முரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அந்த வகையில் கனடிய விமானப்படைக்கு சொந்தமான சிபி 140 அரோரா என்ற விமானம் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த விமானத்தை பயன்படுத்தியமைக்காக 2.4டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மணித்தியாலம் ஒன்றுக்கு 30,000 டொடலர்கள் தேடுதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இந்த செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அதிகளவில் பேசும் பொருளாக இந்த டைடன் மாறியுள்ளமை குறிப்பிடதக்கது.