உடப்புசல்லாவ நகரில் நடமாடும் சேவை..!
மலையக மக்கள் தமது பிரச்சினை முன்வைக்க உரிய இடம் இன்றி பெறும் கஷ்டத்தை எதிர்நோக்கும் இந்த காலக்கட்டத்தில் நேற்றைய தினம் வலப்பனை பிரதேச செயலகத்தால் நடமாடும் சேவை,உடப்புசல்லாவ நகரில் அமைந்திருக்கும் KTS திருமணமண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் விண்ணப்பங்களை கொடுத்தனர்.
குறிப்பாக வறுமையால் பாடசாலை செல்ல வேண்டிய சிறுவர்கள் பாடசாலை செல்லாமல் வீட்டில் இருக்கின்ற சந்தர்ப்பங்கள் மலையக பகுதிகளில் காணப்பபடுகிறது. இவ்வாறான சிறுவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தல். மற்றும் பிறப்பு சான்றிதழ் பெறல்,திருமண சான்றிதழ் பெறல் ,காணி சம்பந்தமான பிரச்சினைகள்,இளைஞர் யுவதிகள் தொழில் சம்பந்தமான செயற்பாடுகள்,போதைப்பொருள் விழிப்பூட்டல் என பல்வேறு தலைப்புகளின் கீழ் இந் நடமாடும் சேவை நடைப்பெற்றது.
இதில் அதிகளவான மக்கள் பங்கு கொண்டு பலன்களை பெற்றனர்.இவ்வாறான நடமாடும் சேவைகள் நடைப்பெற்றமை மக்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமைந்தது.
இதற்கு மலை தேச எழுச்சி இளைஞர் ஒன்றியம் தமது பங்களிப்பை வழங்கியிருந்தமையும் குறிப்பிடதக்கது.