நாகலாந்தில் ‘ப்ளாஸ்டிக்’ பாவனையை குறைக்க புதிய முயற்சி…!
ப்ளாஸ்டிக் பாவனையை குறைக்க உலகின் பல நாடுகள் தங்களது முற்ச்சியை மேற்கொண்டு தான் வருகின்றனர். அந்த வகையில் நாகலாந்தும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.நாகலாந்து பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்நியாவில் வடகிழக்கே காணப்படும் ஒரு மாநிலம் ஆகும்.
இங்கு தான ப்ளாஷ்டிக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு ப்ளாஸ்டிக் உறைகளை பயன்படுத்தாமல் மரக்கறி , பழங்கள் என்பவற்றை இலை கொண்டு வடிவான முறையில் சுற்றப்பட்டு விற்கப்படுகிறது.
இதன் மூலம் ப்ளாஸ்டிக் பாவனையை குறைக்க முடியும் என நாகலாந்து கல்வி அமைச்சர் தெம்ஜென் இம்னா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பல இடங்களில் காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட பொருட்களில் ப்ளாஸ்டிக் பைகளில் தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் நாகலாந்தில் அவ்வாறு வாங்கவோ, விற்கவோ முடியாது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு புதிய புதிய திட்டங்களை மேற்கொள்ளும் பட்சத்தில் ப்ளாஸ்டிக் இல்லாத உலகை காணலாம்.