விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -03
உலகமே ஆவலோடு பார்த்திருந்த ஒரு கனவு நனவாகியது. இஸ்ரோவால் இன்றைய தினம் மதியம்2.35 க்கு சந்திரயான் -03 ஐ மிக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இது எல்விஎம்03-எம்04 ரொக்கட்டின் மூலம் பாய்ந்தது.இதன் போது ஶ்ரீஹரிகோட்டாவில அதிகளவான மக்கள் சூழ்ந்து கைதட்டி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன் போது இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் இவ் திட்டத்தில் பங்கு கொண்ட இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றிகளை பகிர்ந்திருந்தார்.
இதே வேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில்”சந்திரயான்-03
இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. இது ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்துகிறது. இந்த முக்கிய சாதனை நம் விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு சான்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரயாண் -03 இன்னும் 40 நாட்களில் நிலவை அடையும் என்பது குறிப்பிடதக்கது. ஓகஸ்ட் 23 அல்லது 24 ல் தரையிறக்க முடியும்.அதற்கான சூழல் ஏற்பட்டால் இல்லை எனில் ஒரு மாதம் கழித்து தான் இறக்க முடியும் பொருத்தப்பட்டுள்ள ரோவர்க்கு மின்சாரம் தேவை.அது நிலவில் இறங்கி தனது வேலைகளை செய்ய,ஆகவே சூரிய சக்தியால் அது மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.