நீர் கட்டணம் செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகம் தடை..!
நீர் இன்றி அமையாது உலகு ,நீர் தேவை அத்தியவசியமானது. சுத்தமான நீரை பெற்றுக்கொள்வது மிகவும. சிரமாக உள்ளது இன்றைய கால கட்டத்தில்.
இருந்த போதும் இலங்கை தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையானது நீரை சுத்திகரித்து பயனாளர்களுக்கு வழங்குவது குறிப்பிட தக்கது.
இதே வேளை ஒரு சில மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துகின்றனர் .ஒரு சிலர் வீண்விரயம் செய்கின்றனர்.
இதே வேளை பலர் நீர்பட்டியல் கட்டணங்களை உரிய முறையில் செலுத்தாததினால் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தினத்திற்குள் 90ஆயிரத்து 617 பேரின் நீர் விநியோகங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை நீர்கட்டணங்களை காலம் தாமதமாகியும் செலுத்தாத 5270 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை 30லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டில் முதல் ஐந்து மாததிற்குள் புதிய இணைப்புகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கட்டணப்பட்டியலை செலுத்துவதன் மூலம் நீர் விநியோகத்தில் தடை ஏற்பாடா வண்ணம் பாதுகாக்க கூடியதாக இருக்கும்.