விமான நிலைய ஊழிர்கள் பணிபகிஷ்கரிப்பில்..!
சம்பள அதிகரிப்பு கோரிக்கையினை முன்வைத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படிகிறது.
அனைத்து சம்பள நிலைகளிலும் உள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 33,000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப் பணிபகிஷ்கரிப்பில் விமான நிலையங்களுக்கிடையிலான ஊழியர் சங்கம் ,இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம்,முற்போக்கு ஊழியர் சங்கம்,தேசிய ஊழியர் சங்கம்,ஐக்கிய ஊழியர் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி 3000 ஊழியர்கள் இந்த எதிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதியாக 2018 ம் ஆண்டு சம்பள உயர்வு மேற்கொள்ளப்பட்ட போதும் அதன் பிறகு இதுவரையும் சம்பள உயர்வு மேற்கொள்ள வில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு சேவை அரசியல் அமைப்பின் படி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்போராட்டத்தின் காரணமாக விமான நிலையத்தின் அன்றாட செயற்பாடுகளுக்கோ அல்லது விமான சேவைகளுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.