மருந்து ஒவ்வாமையினால் மற்றும் ஒரு மரணம்..!
இலங்கையில் அண்மைக்காலமாக ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் மரணங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிட தக்கது.
கேகாலை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைப்பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10 ம் திகதி கல்லீரல் பிரச்சினையினால் கேகாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் போது நுண்ணுயிர் ஊசியினை செலுத்திய போது ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
இதே வேளை அண்மையில் வயிற்று வலிகாரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.