திடிரென தீப்பற்றிய உணவகம்..!

நேற்று இரவு 8.25 மணியளவில் உணவகமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.வவுனியா நகரில் ,கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் இருக்கும் உணவகம் ஒன்றில் தான் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் போது விரைந்து செயற்பட்ட பொது மக்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததன் மூலம் .தீயணைப்பு பிரிவினரால் தீயிணை மற்ற பகுதிகளுக்கு பரவா வண்ணம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இத் தீவிபத்தின் காரணமாக உணவகத்தின் பெரும் பகுதி பெருமளவில் சேதத்திற்குள்ளானது.இவ்விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *