வெப்ப அலை வீச்சை எதிர்கொள்ள தயாராக இருங்கள்… ஐ.நா எச்சரிக்கை…!
மனிதர்களின் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள காரணமாக உலகளவில் அதிக வெப்பம் ,அதிக மழை என இயற்கை தனது சீற்றத்தை வெளிப்படுத்திய வண்ணம உள்ளது.
இந்நிலையில் இத்தாலி ,ஸ்பெயின் ,ஐரோப்பிய நாடுகளில், அதிகளவான வெப்பத்தின் காரணமாக மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.நியூயோர்க் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக மேகவெடிப்பு,வெள்ளம்,சூறாவளி ,கடுமையான புயல் என வழமைக்கு மாறாக நிலவிவருகின்றது.
அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள்,சீனாவின் மேற்கு பகுதிகள் என பல நாடுகளை வெப்பமானது தாக்கியுள்ளது. இதன் காரணமாக அதிளவான மக்கள் நீர்கடுப்பு ,அம்மை தொற்று போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர் .இதே வேளை உடலின் நீரிழப்பு காரணமாக ஒரு நிமிடத்திற்கு 6 பேர் விகிதம் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பகல் 11.00 மணியிலிருந்து மாலை 6.00மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் என பல நாடுகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.அதிகளவான நீரினை பருகுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதே வேளை வெப்ப அலைவீச்சை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆண்டு மாத்திரம் வெப்ப அலைவீச்சின் தாக்கத்தால் உலகமுழுவதும் 62ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.
இதே வேளை தென்கொரியா, கடந்த வாரமளவில் அதிக மழையினால் பெரும்பாதிப்பிற்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடதக்கது.