ஆதித்யா L-01 ன் சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

விண்ணில் தனது சாதனை படைப்பதற்கு இந்தியா பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் அண்மையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் -01 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி இருந்தது.

ஆதித்யா L-01 ஆனது பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து 15லட்சம் கிலோ மீட்டர் தொலைவில உள்ள லாக்ராஞ்சியன் என்ற இடத்தை சென்றடைந்து அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் .

இதே வேளை ஆதித்யா L -01 ஆனது 16 நாட்கள் பூமியை சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகின்றது.

அந்த வகையில் சுற்று வட்டப்பாதையை உயர்த்துப
ம் பணியின் முதற் கட்டப்பணி கடந்த 3ம் திகதி நடந்தது.அதன பிறகு 4ம் திகதி யும் உயர்த்தப்பட்டது.அதன் பிறகு 3 ம் கட்டமாக கடந்த 10ம் திகதியும் உயர்த்தப்பட்டது.இநநிலையில் இன்றைய தினமும் 4வதுகட்டமாக பெங்களூரிலுள்ள கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவானது விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில தற்போது ஆதித்யா L-01 லும் வெற்றியை கண்டுள்ளது என சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *