அரிசிக்கு தட்டுப்பாடு..!
கடந்த சில வாரமாக இந்தியாவின் பல இடங்களில் அதிளவான மழையின் காரணமாக அரிசி உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் அரிசி தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்குடன் பாஸ்மதி அல்லாத அரிசிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
இந்நிலையை அடுத்து உலகளவில் அரிசிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்தியாவிடம் இருந்து140 நாடுகள் அரிசியை வாங்குகின்றன.சர்வதேச அளவில் இந்தியாவின் பங்கு 40 சதவிகிதமாகும்.இதனை அடுத்து அமெரிக்காவில் மக்கள் அரிசியை வாங்க வரிசையில் நிற்கின்றனர்.இதனால் ஒரு நபருக்கு ஒரு அரிசி பை வழங்கப்படுகிறது.இதே வேளை அமெரிக்காவில் பல கடைகளில் அரிசியின் விலை உயர்வடைந்துள்ளது. 22 டொலராக இருந்த அரிசியின் விலை தற்போது 47 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் துருக்கி ,சிரியா,பாகிஸ்தான் என பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.