மரத்தின் 100 அடியில் இருந்து போதை பொருள் விற்பனை செய்த பெண் கைது..!
போதை பொருள் வர்த்தகம் என்பது தற்காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் நடந்து வருகிறது.இவை யாவரும் அறிந்த விடயம்.ஆனால் ஆதிகாலத்து பாணியில் போதைப்பொருளை விற்பனை செய்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதாவது பெண் ஒருவரிடமிருந்து
1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகளும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெயாங்கொட மாரபொல பிரதேச வனப்பகுதியில் பெரிய மரத்தின் உச்சியில் மரத்தடிகள் மற்றும் பலகைகளால் பரண் ஒன்றை அமைத்து யாரும் அறியாத வகையில் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணத்தை பையில் இட்டு கயிறு மூலம் பரணுக்கு அனுப்பிய பின்னர் பரணில் இருந்து போதைப்பொருளை கீழே அனுப்பி இந்த வர்த்தகம் நடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை மரத்தில் 100அடிக்கு மேல் பரண் அமைந்துள்ள படியால் சுற்றுவட்டாரத்தில் இருந்து யார் வந்தாலும் கண்காணிக்க கூடியாக இருந்திருக்கிறது.இதனால் சூட்சுமமான முறையில் இவ் வர்த்தகம் நடைப்பெற்று வந்திருப்பாதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.