கைதிகளுக்கிடையிலான மோதலில் 31 பேர் உயிரிழப்பு..!
தென் அமெரிக்க நாடாக காணப்படும் ஈக்வடார் மத்திய சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் எற்பட்ட கலவரத்தில் 31கைதிகள் உயிரிழந்ததுடன் மேலும் பொலிஸார் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் காயத்திற்குள்ளானார்கள் .
கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை வரவழைத்து கண்ணீர் புகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த கலவரத்தை பயன்படுத்தி பல கைதிகள் தப்பியோடியுள்ளனர்.அவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுவருகின்றனர்.
இதே வேளை கொலை ,கொள்ளை ,பயங்கரவாதம்,ஊழல்,குடும்ப வன்முறைகள் போன்ற பிரச்சினைகள் நிறைந்த நாடாக ஈக்குவாடார் காணப்படுகின்றமையும் குறிப்பிடதககது.