ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி..!
சூடானில் ஏவுகணை வீசி திடீர் தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் மோதல் இடம்பெற்று வருகிறது.இதன் காரணமாக 500க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தான் கார்டூமிற்கு மேற்கே அமைந்துள்ள ஒம்துர்மன் நகரில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் போது திசைமாறி சந்தை பகுதியில் விழுந்துள்ளது.
இதன் காரணமாக பொது மக்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மேலும் 50 ற்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.