மனைவியை கொலை செய்து புதைத்த கணவனும் மகனும் கைது..!
50 வயது மதிக்க தக்க பெண்ணை அடித்து கொன்று தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதுளை ரிதிமாலியத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் குறித்த பெண் காணமல் போயுள்ளதாக சந்தேகநபர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமை பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுள்ளது.இதற்கமைய சந்தேக நபருக்கும் குறித்த பெண்ணிற்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதன் பிறகு குறித்த பெண்ணை அடித்து கொலை செய்து தனது மூத்த மகனின் உதவியுடன் தோட்டத்தில் புதைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வத்துள்ளது.
இத்தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர்(70வயது) மற்றும் மூத்த மகன்(26வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.