இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் முயற்சி..!

கோண்டாவில பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கு வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை நண்பனாக அறிமுகம் செய்து கொண்டு கீரிமலை பகுதிக்கு சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.

இதற்கினங்க குறிப்பிட்ட இளைஞன் அப்பகுதிக்கு சென்றபோது, அங்கு நின்ற கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.

அவ்வேளை இளைஞன் சுதாகரித்து தாக்குதலில் இருந்து விடுப்பட்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவத்தை கண்ட பிரதேச மக்கள் ஒன்று கூடியதை அடுத்து ,அங்கிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பித்து ஓடியுள்ளனர்.

இது தொடர்பாக குறிப்பிட்ட இளைஞனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *